Skip to main content

திருப்புகழ் 449 கனகசபை மேவும் (சிதம்பரம்) Arunagiri Nathar




தனதனன தான தனதனன தான தனதனன தானத் தனதானா

கனகசபை மேவும் எனதுகுரு நாத கருணைமுருகேசப் பெருமாள்காண்

கனகநிற வேதன் அபயமிட மோது கரகமல சோதிப் - பெருமாள்காண்

வினவுமடியாரை மருவிவிளையாடு விரகு ரச மோகப் பெருமாள்காண்

விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் விமல சர சோதிப் பெருமாள்காண்

சனகிமணவாளன் மருகனென வேத சதமகிழ்குமாரப் - பெருமாள்காண்

சரணசிவ காமி இரணகுல காரி தருமுருக நாமப் - பெருமாள்காண்

இனிதுவன மேவும் அமிர்தகுற மாதொடு இயல்பரவு காதற் - பெருமாள்காண்

இணையில் இப தோகை மதியின்மகளோடு இயல்புலியுர் வாழ்பொற் பெருமாளே.

Comments

Popular posts from this blog

திருவண்ணாமலை கார்த்திகை . 11 நாள் மகா தீபம்

கார்த்திகை தீபம் மாவுளி

HAPPY NEW YEAR

Wish you happy new year 2010