தனந்தனன தானத் தனந்தனன தானத் தனந்தனன தானத் தனதான சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச் சரங்களொளி வீசப் - புயமீதே தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற் சரங்கண்மறி காதிற் - குழையாட இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற் றிரம்பையழ கார்மைக் - குழலாரோ டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற் றிரங்கியிரு தாளைத் தருவாயே சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச் சிறந்தமயில் மேலுற் - றிடுவோனே சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச் சினந்தசுரர் வேரைக் களைவோனே பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப் ப்ரசண்டஅபிராமிக் கொருபாலா பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப் பெரும்புலியுர் வாழ்பொற் - பெருமாளே.
Comments