Skip to main content

தொந்தி சரிய திருப்புகழ் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் Thonthi sariya thirupugazha arunagiri nathar




தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன தனதான

தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
தந்த மசைய முதுகே வளையஇதழ்
தொங்க வொருகை தடிமேல் வரமகளிர்

நகையாடி தொண்டு கிழவ னிவனா
ரெனஇருமல் கிண்கி ணெனமு னுரையே
குழறவிழி துஞ்சு குருடு படவே
செவிடுபடு ...... செவியாகி

வந்த பிணியு மதிலே மிடையுமொரு
பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
மைந்த ருடைமை கடனே தெனமுடுக
... துயர்மேவி மங்கை யழுது விழவே
யமபடர்கள் நின்று சருவ மலமே
யொழுகவுயிர் மங்கு பொழுது கடிதே
மயிலின்மிசை ...... வரவேணும்

எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக
...... அபிராம இங்கு வருக

அரசே வருகமுலை யுண்க வருக
மலர்சூ டிடவருக என்று பரிவி
னொடுகோ சலைபுகல சிந்தை மகிழு
மருகா குறவரிள வஞ்சி மருவு
மழகா அமரர்சிறை சிந்த அசுரர்
கிளைவே ரொடுமடிய ... அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
தந்த குமர அலையே கரைபொருத
செந்தி னகரி லினிதே மருவிவளர்
...... பெருமாளே. வருமாயன்

Comments

Popular posts from this blog

திருப்புகழ் 891 சதங்கை மணி (பெரும்புலியூர்) Arunagiri Nathar சகல துயரங்களை போக்கிடும் முருகப்பெருமாள்

தனந்தனன தானத் தனந்தனன தானத் தனந்தனன தானத் தனதான சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச் சரங்களொளி வீசப் - புயமீதே தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற் சரங்கண்மறி காதிற் - குழையாட இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற் றிரம்பையழ கார்மைக் - குழலாரோ டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற் றிரங்கியிரு தாளைத் தருவாயே சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச் சிறந்தமயில் மேலுற் - றிடுவோனே சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச் சினந்தசுரர் வேரைக் களைவோனே பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப் ப்ரசண்டஅபிராமிக் கொருபாலா பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப் பெரும்புலியுர் வாழ்பொற் - பெருமாளே.

Happy Birthday shiva

ROYAL ENFIELD GURILLA 450 bike